Posts

Showing posts from 2013

எனக்கொரு உண்ம தெரிஞ்சாகணும்.

"மக்ளே  எனக்கு வயசாகிட்டே இருக்குலாப்பா..எனக்க காலத்துக்கு பொறவு ஒனக்கு யாரு இருக்கா? ஒண்ணு கெடக்க ஒண்ணு  ஆயிட்டுனா ஒன்ன யாருடே பாத்துகிடுவா?ஒனக்கு ஒரு கல்யாணத்த செய்து வச்சிட்டா இந்த கட்ட நிம்மதியா போயி சேந்துரும். நீதான் சொன்னா கேக்க மாட்டக்க". இது தாயின் குமுறல். "ஆமாம்மா, நானும் ஒன்கிட்ட சொல்லனும்னு  தான் இருந்தேங். ஏங்கூட ஒரு புள்ள வேலை பாக்கா.நல்லா இருப்பா.நல்ல கொணம்.ஒனக்கும் புடிக்கும். நம்ம புள்ளதாம்ம". இந்த  மகனின் பதில் அவளை இருபது வருடங்களுக்கு பின்னால் அழைத்து சென்று விட்டது. அவனிடம் சொல்லாதது அவளின் தவறுதான். கண்ணீர் வடிய மனம் கடந்த காலத்தை அசை போட்டுக் கொண்டிருந்தது.... வீட்டில் மூத்த மகள் என்பதால் தம்பி தங்கைகளை கவனித்து கொள்ள பள்ளிக்கூடத்தை நினைத்துக்கூட பார்த்திருக்க வில்லை.அறிவிலி ஆதலால் தானோ கட்டியவன் விட்டு சென்று விட்டான்; கையில் ஒரு குழந்தையோடு. இப்போது அவள் ஒரு கைம்பெண். கையில் காசில்லை.கூலிக்கு ஓடி ஓடி உழைத்தாலும் கால் வயிற்றுக்கு தான் கஞ்சி கிட்டியது.காலங்கள் கடந்து போயின.மகனை படிக்க வைத்து விட வேண்டும். என்னுடைய து...

எதை? எதை??

Image
தேர்வு நடந்து கொண்டிருந்தது . தேர்வு எழுதுவோர் நூற்றுக்கும் மேல்.. கண்காணிப்பாளர்கள் நான்கைந்து பேர். அவர்களின் மெல்லிய நடை... கூறிய பார்வை.... அவன் எதையுமே சட்டை செய்யவில்லை . கண் கொட்டாமல்  பார்க்கிறான். எனது இடது பின் புறமிருந்து  என்னை, என்னை மட்டுமே   கூர்ந்துப் பார்க்கிறான். தாவணியை சரி செய்து கொண்டேன்; மீண்டும்  அதே பார்வை. நான் திரும்பிப்  பார்த்தால்  தலை கவிழ்ந்து எழுதுவான். நான் பெண் என்பதாலோ?  வெட்கம் கலந்த பயம். விடைத்தாளை திருப்பும் போது   அவன் கண்கள் வெறித்து நிற்கின்றன. "மேற்பார்வையாளரிடம் சொல்லலாம்; அவன் மாட்டிக் கொள்வான்; என்னையும் பாதிக்குமே; சீருடைக்கு விடிவு காலம் வராதா?" போராட்டத்தில் என் மனம்! மனப்போராட்டம் முடிவுக்கு வந்தது, அவன் எண்ணம் புரிந்தது  அவன் பருவப் பெண் தானே நானும். ஆசைக்கு இணங்க இசைந்தேன் , அவன் பார்வைக்கு  விருந்தாக்க துணிந்தேன்  என் விடைத்தாளை!!!

காதலின் இலக்கணம்

பார்க்கத் துடித்தேன்  நீ பார்த்தால்  நிலம் பார்த்தேன். பேச துடித்தேன்  பேச துணிந்தால்  நாவோடு  மட்டுமே முடிகிறது. சந்திப்புக்கு ஏங்கினேன். சந்திக்க நேர்ந்தால்  விலகி நின்றேன். நீ போக  பின் பார்த்து  மீண்டும் மீண்டும்  அதே ஏக்கம்.. ஓ ,! இது தான் காதலின் காரணமா? இல்லை  காதலின் இலக்கணமே இது தானா?

புத்தக மூட்டை

Image
காகிதக்கூழ் கட்டுகளும் பதிப்பகத்தின் வடிவமைப்பும் கவிஞரின் கற்பனையும் ஓவியனின் திறமையும் அரசியலின் ஆதிக்கமும் ஆசிரியரின் விளக்கவுரையும் எங்கள் கையெழுத்துக்களாம்              தலையெழுத்துக்களும் எங்கள் முதுகினிலே             புத்தக மூட்டைகளாய்! நாளைய பாரதம் தலை நிமிர நாங்கள் இன்று கூனி குறுகுகிறோம்!

ஒரு பாமரக் குரல்

கல்வி அதிகாரிகளே, கவலை ஏன்? மாணவன்  திசை மாறுகிறானா? திரைப்படம் காட்டுங்கள் பள்ளிகளில். திசை திரும்ப வில்லையா? பள்ளிகளில்  BAR தொடங்குங்கள்  அல்லது   பள்ளியை   PARKஆக்குங்கள்  இல்லையேல், பாடத்தையே தேவையாக்காதீர்கள்; தேவைகளை பாடமாக்குங்கள்!

ஆசிரியருக்கு ஒரு கேள்வி

ஆசிரியர்களே, மாணாக்கரை படிக்கச் சொன்னீரா? படுக்கச் சொன்னீரா? உண்ணுவது  தவிர்த்து உறங்கியே கழிக்கிறான். விழிப்பு என்பதற்கே விடுமுறை போலும். "காலம் பொன் போன்றது" ஆம், வீனாக்குவதே இல்லை. "காலத்தை வீணாக்காதீர்" விழித்தால் தானே வீணாகும். உறக்கமே முக்கியமானதால்தானோ விழித்துக்கொண்டே இருக்கிறது மக்கள் தொகை! எனவே தான் ஆசிரியர்களே மாணாக்கரை படிக்கச் சொன்னீரா? படுக்கச் சொன்னீரா??

இளமையின் ஏக்கம்

Image
எனக்கும் ஆசையுண்டு  பிரபலமாக; பல பிரபலங்களைப்போல ... எப்படி பிரபலித்தார்கள் ? இயற்கையின் பல  இயல்பைச் சொல்லித்தானே! எங்களூர் இயற்கையை  அக்கு வேறு ஆணி வேறாக  அலசி எழுதிட ஆசை! எழுதத் தெரியாது. எழுத்தறிவு..........? எங்களூர் மலையில்  தஞ்சம் புகும் முகிலினத்தின்  முக்காடிட்ட முகத்தினை; உற்சாகமாய் உயரே எழும்  உணர்ச்சியின் உச்சத்தை  உரக்கப் படித்திட ஆசை! படிக்கத்தெரியாது. படிப்பறிவு............? பச்சை பாய் பரப்பி  பயிர் பரப்பின் மேலாடும்  அலையின் அழகினை; காரணமாம் காற்றின் கீர்த்தியை  இசைத்திட ஆசை! இசைக்கத் தெரியாது! இசைஞானம்..........? இரத்தினபுரத்தின் இனிமையை; இயற்கை இரகசியத்தை; வனப்பு மிகு வன அழகை  பாருலகும் பரப்பிட ஆசை ! பாமரன்..................நான்! எ னக்கும் ஆசையுண்டு படிப்பேன்;பட்டம் பெறுவேன். எழுதுவேன்;இயற்றுவேன். பாடுவேன் பாரதியாய்; கவிதையில் கன்னதாசனாவேன்; இசைப்பேன் இளைய ராஜா போல். அப்போது, ரசிப்பின் இளமையும் இருக்காது. ரசிக...

அறிமுகமாகாத அயோக்கியன்!

மாதுகளை பார்ப்பதே பிடிக்காது                 மற்றவர் முன்னிலையில்; மதுபானம் குடிப்பதே பிடிக்காது                பிறர் உடனிருக்கையில்; புகைப்பது என்பதே தவறு                மற்றவர் பிடிக்கும்போது ; சினிமாவில் பிடித்ததெல்லாம் ஓரே நிறம்                  நீலப்படம் மட்டுமே. நண்பர்கள் கிடையவே கிடையாது; விருப்பம் எல்லாம் தனிமையே ; இரகசியம் வெளியாகிடக் கூடாதே  ஆம், நான் தான்   அறிமுகமாகாத அயோக்கியன்!

எய்ட்ஸ்

எரிமலையின்       குமுறல் ; அலைகடலின்       சீற்றம் ; கரை கடர்   புயலின்    வேகம் ; கோபத்தின்      உச்சம் ; குள்ள நரியின் தந்திரம் ; நடுநிசி   மயான   அமைதி ; அரக்கனின்   அசுரத்தனம் ; மோகத்தின்     உச்சநிலை ; அணுவின்  ஆற்றல் ......... அத்தனையும்     ஒன்றாய் ஆம் ! அத்தனையும்   ஒன்றிலேயே , துப்பாக்கியின்   தோட்டாவாய் , நாணேற்றிய    அம்பாய் , அணை திறந்த   வெள்ளமாய் - வருகிறேன் ! சிக்கினோரை    தப்பவிடேன் , உதிரத்தில்   புகுந்திடுவேன் , உயிரினையும்    குடித்திடுவேன் ! கேள்   கேடுகெட்ட   மானிடனே , உன் மனை   தவிர்த்து   உறவு வேண்டாம் ! சோதித்த   இரத்தமின்றி   வேறு வேண்டாம் !! அசுத்த ஊசியா   வேண்டவே வேண்டாம் !!! தப்பானால்   சிக்கிடுவாய் ; சிக்கினால்   தப்பிடாய் . எனை   வென்றிட   யாருளார...