காதலின் இலக்கணம்
பார்க்கத் துடித்தேன்
நீ பார்த்தால்
நிலம் பார்த்தேன்.
பேச துடித்தேன்
பேச துணிந்தால்
நாவோடு மட்டுமே முடிகிறது.
சந்திப்புக்கு ஏங்கினேன்.
சந்திக்க நேர்ந்தால்
விலகி நின்றேன்.
நீ போக
பின் பார்த்து
மீண்டும் மீண்டும்
அதே ஏக்கம்..
ஓ ,!
இது தான் காதலின் காரணமா?
இல்லை
காதலின் இலக்கணமே இது தானா?
Comments
Post a Comment