எய்ட்ஸ்


எரிமலையின்      குமுறல்;
அலைகடலின்      சீற்றம்;
கரை கடர்  புயலின்   வேகம்;
கோபத்தின்     உச்சம்;
குள்ள நரியின் தந்திரம்;
நடுநிசி  மயான  அமைதி;
அரக்கனின்  அசுரத்தனம்;
மோகத்தின்    உச்சநிலை;
அணுவின்  ஆற்றல் .........

அத்தனையும்    ஒன்றாய்
ஆம்!
அத்தனையும்  ஒன்றிலேயே,

துப்பாக்கியின்  தோட்டாவாய்,
நாணேற்றிய   அம்பாய்,
அணை திறந்த  வெள்ளமாய் - வருகிறேன்!

சிக்கினோரை   தப்பவிடேன்,
உதிரத்தில்  புகுந்திடுவேன்,
உயிரினையும்   குடித்திடுவேன்!

கேள்  கேடுகெட்ட  மானிடனே,
உன் மனை  தவிர்த்து  உறவு வேண்டாம்!
சோதித்த  இரத்தமின்றி  வேறு வேண்டாம்!!
அசுத்த ஊசியா  வேண்டவே வேண்டாம்!!!

தப்பானால்  சிக்கிடுவாய்;
சிக்கினால்  தப்பிடாய்.

எனை  வென்றிட  யாருளார்??
மானுடமே  எனதடிமை!

எனவே தான்,

எனை  அறிந்து கொள்.

உனை  திருந்தி கொள்.

Comments

Popular posts from this blog

இரங்கற்பா

பழங்கால தமிழர்களும் வேதாகம அறிவும்.

எதுடா நீதி?