எதை? எதை??
தேர்வு நடந்து கொண்டிருந்தது .
தேர்வு எழுதுவோர் நூற்றுக்கும் மேல்..
கண்காணிப்பாளர்கள் நான்கைந்து பேர்.
அவர்களின் மெல்லிய நடை... கூறிய பார்வை....
அவன் எதையுமே சட்டை செய்யவில்லை .
கண் கொட்டாமல் பார்க்கிறான்.
எனது இடது பின் புறமிருந்து
எனது இடது பின் புறமிருந்து
என்னை, என்னை மட்டுமே
கூர்ந்துப் பார்க்கிறான்.
தாவணியை சரி செய்து கொண்டேன்;
மீண்டும் அதே பார்வை.
தாவணியை சரி செய்து கொண்டேன்;
மீண்டும் அதே பார்வை.
நான் திரும்பிப் பார்த்தால்
தலை கவிழ்ந்து எழுதுவான்.
நான் பெண் என்பதாலோ?
வெட்கம் கலந்த பயம்.
விடைத்தாளை திருப்பும் போது
அவன் கண்கள் வெறித்து நிற்கின்றன.
"மேற்பார்வையாளரிடம் சொல்லலாம்;
அவன் மாட்டிக் கொள்வான்;
என்னையும் பாதிக்குமே;
சீருடைக்கு விடிவு காலம் வராதா?"
போராட்டத்தில் என் மனம்!
சீருடைக்கு விடிவு காலம் வராதா?"
போராட்டத்தில் என் மனம்!
மனப்போராட்டம் முடிவுக்கு வந்தது,
அவன் எண்ணம் புரிந்தது
அவன் பருவப் பெண் தானே நானும்.
ஆசைக்கு இணங்க இசைந்தேன் ,
அவன் பார்வைக்கு
விருந்தாக்க துணிந்தேன்
என் விடைத்தாளை!!!

இதுதான் கருத்துச் சிறப்பு! மிக நன்று!
ReplyDelete