அறிமுகமாகாத அயோக்கியன்!
மாதுகளை பார்ப்பதே பிடிக்காது
மற்றவர் முன்னிலையில்;
மதுபானம் குடிப்பதே பிடிக்காது
பிறர் உடனிருக்கையில்;
புகைப்பது என்பதே தவறு
மற்றவர் பிடிக்கும்போது ;
சினிமாவில் பிடித்ததெல்லாம் ஓரே நிறம்
நீலப்படம் மட்டுமே.
நண்பர்கள் கிடையவே கிடையாது;
விருப்பம் எல்லாம் தனிமையே ;
இரகசியம் வெளியாகிடக் கூடாதே
ஆம்,
நான் தான்
அறிமுகமாகாத அயோக்கியன்!
Comments
Post a Comment