Posts

Showing posts from July, 2013

புத்தக மூட்டை

Image
காகிதக்கூழ் கட்டுகளும் பதிப்பகத்தின் வடிவமைப்பும் கவிஞரின் கற்பனையும் ஓவியனின் திறமையும் அரசியலின் ஆதிக்கமும் ஆசிரியரின் விளக்கவுரையும் எங்கள் கையெழுத்துக்களாம்              தலையெழுத்துக்களும் எங்கள் முதுகினிலே             புத்தக மூட்டைகளாய்! நாளைய பாரதம் தலை நிமிர நாங்கள் இன்று கூனி குறுகுகிறோம்!

ஒரு பாமரக் குரல்

கல்வி அதிகாரிகளே, கவலை ஏன்? மாணவன்  திசை மாறுகிறானா? திரைப்படம் காட்டுங்கள் பள்ளிகளில். திசை திரும்ப வில்லையா? பள்ளிகளில்  BAR தொடங்குங்கள்  அல்லது   பள்ளியை   PARKஆக்குங்கள்  இல்லையேல், பாடத்தையே தேவையாக்காதீர்கள்; தேவைகளை பாடமாக்குங்கள்!

ஆசிரியருக்கு ஒரு கேள்வி

ஆசிரியர்களே, மாணாக்கரை படிக்கச் சொன்னீரா? படுக்கச் சொன்னீரா? உண்ணுவது  தவிர்த்து உறங்கியே கழிக்கிறான். விழிப்பு என்பதற்கே விடுமுறை போலும். "காலம் பொன் போன்றது" ஆம், வீனாக்குவதே இல்லை. "காலத்தை வீணாக்காதீர்" விழித்தால் தானே வீணாகும். உறக்கமே முக்கியமானதால்தானோ விழித்துக்கொண்டே இருக்கிறது மக்கள் தொகை! எனவே தான் ஆசிரியர்களே மாணாக்கரை படிக்கச் சொன்னீரா? படுக்கச் சொன்னீரா??

இளமையின் ஏக்கம்

Image
எனக்கும் ஆசையுண்டு  பிரபலமாக; பல பிரபலங்களைப்போல ... எப்படி பிரபலித்தார்கள் ? இயற்கையின் பல  இயல்பைச் சொல்லித்தானே! எங்களூர் இயற்கையை  அக்கு வேறு ஆணி வேறாக  அலசி எழுதிட ஆசை! எழுதத் தெரியாது. எழுத்தறிவு..........? எங்களூர் மலையில்  தஞ்சம் புகும் முகிலினத்தின்  முக்காடிட்ட முகத்தினை; உற்சாகமாய் உயரே எழும்  உணர்ச்சியின் உச்சத்தை  உரக்கப் படித்திட ஆசை! படிக்கத்தெரியாது. படிப்பறிவு............? பச்சை பாய் பரப்பி  பயிர் பரப்பின் மேலாடும்  அலையின் அழகினை; காரணமாம் காற்றின் கீர்த்தியை  இசைத்திட ஆசை! இசைக்கத் தெரியாது! இசைஞானம்..........? இரத்தினபுரத்தின் இனிமையை; இயற்கை இரகசியத்தை; வனப்பு மிகு வன அழகை  பாருலகும் பரப்பிட ஆசை ! பாமரன்..................நான்! எ னக்கும் ஆசையுண்டு படிப்பேன்;பட்டம் பெறுவேன். எழுதுவேன்;இயற்றுவேன். பாடுவேன் பாரதியாய்; கவிதையில் கன்னதாசனாவேன்; இசைப்பேன் இளைய ராஜா போல். அப்போது, ரசிப்பின் இளமையும் இருக்காது. ரசிக...

அறிமுகமாகாத அயோக்கியன்!

மாதுகளை பார்ப்பதே பிடிக்காது                 மற்றவர் முன்னிலையில்; மதுபானம் குடிப்பதே பிடிக்காது                பிறர் உடனிருக்கையில்; புகைப்பது என்பதே தவறு                மற்றவர் பிடிக்கும்போது ; சினிமாவில் பிடித்ததெல்லாம் ஓரே நிறம்                  நீலப்படம் மட்டுமே. நண்பர்கள் கிடையவே கிடையாது; விருப்பம் எல்லாம் தனிமையே ; இரகசியம் வெளியாகிடக் கூடாதே  ஆம், நான் தான்   அறிமுகமாகாத அயோக்கியன்!