Posts

பரிமாணமும் பரிணாமமும்

பரிணாமம் ...?பரிமாணம் ...? கேள்விகள் கேள்விகள் கேள்விகள் மட்டுமே. சார்லஸ் டார்வின் அவர்களின் படிநிலை வளர்ச்சி கொள்கை(Evalution Theory) தான்  அமீபா முதல் மனித இனம் வரை பரிணாம வளர்ச்சி அடைந்திருப்பதை நமக்கு அறியத் தருகிறது. இதன் அடிப்படையில் தான் ஓருயிர் உயிரி முதல் பாலூட்டிகள் வரை பட்டியலிடப்பட்டுள்ளன என்பதும் நாம் அறிந்ததே. அதன்படி கணக்கிட்டால்  மனிதனுக்கு அடுத்தபடியான உயிரினங்கள் உலகில் இருக்கின்றனவா?  அப்படி இருக்கிறதென்றால் நமக்கு தெரியாமல் இருப்பதேன்??  அவைகளைத் தான் வேற்று கிரகவாசிகள்(Aliens) என்று நாம் அழைக்கிறோமா??? பரிமாணத்தை திரைப்படங்களில் 2D ,3D என 9D வரையில் வளர்ந்துவிட்டிருப்பதை வைத்து புரிந்துகொள்ளலாம். வேகத்தை ஒலியின் வேகம், ஒளியின் வேகம், அலைக்கற்றைகளின்  2G...5G என்பவை மூலம் தெரிந்து கொள்ளலாம். இவைகளைப் பார்க்கும்போது நீளம்,அகலம்,உயரம் போன்று  வேகமும் காலமும்தான் அடுத்தடுத்த  பரிமாணங்கள்   எனத்தோன்றுகிறதுதானே? பறக்கும் தட்டுகள் இதன் அடிப்படையில்தான் இயங்குகின்றனவா? வேற்றுகிரக வாசிகள்  காலப்பயணங்கள் மேற்கொள...

எதுடா நீதி?

பெரும்பான்மை நீ பேசினா சமூகநீதி! சிறுபான்மை நான் பேசினா சாதியவாதமா? தாழ்த்தியவன் நீ பேசினா சமூகநீதி! தாழ்த்தப்பட்டவன் நான் பேசினா சாதியவாதமா? ஒடுக்கியவன் நீ பேசினா சமூகநீதி! ஒடுக்கப்பட்டவன் நான் பேசினா சாதியவாதமா? ஆண்டவன்-னு நினைக்கிற நீ பேசினா சமூக நீதி! அடக்கப்பட்டவன் நான்  பேசினா சாதிய வாதமா? அடித்தவன்  நீ பேசினா சமூக நீதி! அடிப்பட்டவன் நான்  பேசினா சாதிய வாதமா? அனுபவித்தவன் நீ பேசினா சமூக நீதி! அனுமதி மறுக்கப்பட்டவன் நான்  பேசினா சாதிய வாதமா? உலகம் பார்க்க நீ செய்வது சமூக நீதி! உலகுக்கு உன்னை காட்ட நான் செய்வது  சாதிய வாதமா? பணக்காரன் நீ போட்டா தர்மம்! பசித்தவன் நான் எடுத்தா திருட்டா? என்னடா பிரச்சினை உனக்கு? எதற்கடா இத்தீராத வன்மம் உனக்கு? சமநீதி வேண்டும் எனக்கு! சமத்துவமும் வேண்டும் எனக்கு! என்ன உலகமடா இது? பாதிக்கப் பட்டவன் நான் பேசினாலும் -என்னை பாதித்தவன் அவன் பேசினாலும்  ஒரே விதனமான எதிர் வினை தானா? குற்றமிழைத்தவன் நீ பேசலாம்... நிரபராதி நான் பேசலாகாதா? குரலில்லாமலிருந்தேன்! குரலெழுப்பவே கூடாதா? அடி வாங்கியவனாக பேசுகிறேன்;       ...

போராட்டம்

கருப்பையில் உருவாக  கருவறையிலும் கலவியறையிலும் கணவ‍ன் மனைவியின் கடினமான போராட்டம்! இணைகளின் சினைபிடிக்க  'இந்திரியம்', 'அண்டம்' என்னும் இணை ஆயுத அணுக்களின் இணக்கமான போராட்டம்! பெண்மையாய் உருவானால், கருவொரு பிண்டமென பிடிங்கியெரியாமலிருக்க பெண்ணினத்தின் பொறுமையான போராட்டம்! கருக்குளத்தின் நன்னீரின் கரைகடந்து; இருள் துறந்து வெளியேற முன்னூறு நாளளவும் மூச்சடைத்து போராட்டம்! கருப்பை தவம் கலைத்து சுவாசப்பை வெற்றிடம் நிரப்ப நெஞ்சாங்கூட்டிடை உதரவிதானத்தின் உக்கிர போராட்டம்! தொப்புள்கொடி பிரிந்து இரைப்பை வெற்றிடம் நிரப்ப தாய்பாலுக்காக அழுகையுடன், ஆரம்பமே போராட்டம்! தலை நிமிர...உருண்டு புரள... ஊர்ந்து நகர...எழுந்து நிற்க... நடை பழக...ஓடி விளையாட.. முதல் வருடமழுமைக்கும்  முட்டி மோதிய போராட்டம்! மதி கெட்ட மானிடனே, மண்ணுலக வாழ்க்கையே ஒரு போராட்டமடா! போராடினால், "ஆன்றி இந்தியன்" "தேச விரோதி" "தேச துரோகி" "நாடே சுடுகாடாகிடும்" மானுடமே மறவாதே, சுடுகாட்டிலும் ஒரு போராட்டம் உண்டு உன்னுடல் சாம்பலாக உடலுக்கும் நெருப்புக்குமான கடைசி போராட்டம்!

போலி தேச பக்தி

தேச துரோகியாகவே இருக்க விரும்புகிறேன்-நான் தேச விரோதியாகவே மாற விரும்புகிறேன். சாமி கும்பிடுகிறேன் என்பதை மீண்டும் கும்புடுறேன் சாமி என்றாக்குவது தான் உங்கள் தேச பக்தி என்றால் மதிப்பு மிக்க மனிதனை  மாக்களினும் மட்டமாக்குவது தான் உங்கள் தேச பக்தி என்றால் மாட்டுக்காக மனிதனை மனுதாபிமான மற்று அடித்தே கொல்வதுதான்  உங்கள் தேச பக்தி என்றால் கோமானேயானாலும் கோமாதாவை கும்பிடுவதும் கோமியத்தை குடிப்பதுவும் தான் உங்கள் தேச பக்தி என்றால் மதத்தின் பெயரால் மனிதனுக்கு மரணத்தை கொடுப்பதுதான் உங்கள் தேச பக்தி என்றால் குடிக்கும் நீருக்காக பூர்வகுடிமகனை அடித்து உதைப்பதை வேடிக்கைப் பார்ப்பதுதான் உங்கள் தேச பக்தி என்றால் தன் நிலம் நாடி நடக்கும்  புலம் பெயர் தொழிலாளரின் நடைபயணத்தை கேலிபேசி கேளிக்கையாக்குவதுதான் உங்கள் தேச பக்தி என்றால் கஞ்சிக்கில்லாமல் கதரும் கடைகுட்டியின் பசி போக்க  கடைவெளிக்கு செல்லாமல் அநாகரீக அதிகாரவர்க்கத்தின்  அடக்குமுறைக்கு அடிபணிந்திருப்பதுதான் உங்கள் தேச பக்தி என்றால் நோயுற்ற பச்சிளம் குழந்தைகளின்  உயிர் காக்க தன்காசில்  உயிர் காற்று வாங்கினால் பரிசு ...

இரங்கற்பா

Image
மாப்ள...மாப்ள...மாப்ள... மூச்சுக்கு முன்னூறு முறை முணுமுணுக்குமே உன் வாய் மறுதலிக்கிறதே இப்போது ஏன்? சொல்லு மாப்ள சொல்லு! அலைபேசி அழைப்புக்கெல்லாம் அதிருமே "மாப்ள சொல்லு" அமைதி ஆகியதே அந்த வார்த்தை எப்படி? சொல்லு மாப்ள சொல்லு! மின்சார துண்டிப்பா முதலாவது  அழைப்பது உன்னைத்தானே இனி யாரை அழைப்பேன் நான்? சொல்லு மாப்ள சொல்லு! "உன்னைத்தானே மாப்ள செய்ய முடியும்" உரிமையான உனது கேலியும் கிண்டலும் வச்சு செய்வாயே, இனி யார் செய்வார் சொல்லு மாப்ள சொல்லு! ஊருக்கு வரும்போதெல்லாம் உடனே வந்து பார்ப்பாயே பாசமாய் விசாரிப்பாயே இனி யார் விசாரிப்பார்? சொல்லு மாப்ள சொல்லு! ''உனக்கென்ன மாப்ள நீள காலு...நில்லு''! என்று தானே எப்போதும் சொல்வாய் இன்று நீ மட்டும் எப்படி முந்தி சென்றாய்? சொல்லு மாப்ள சொல்லு! எதையுமே கேட்டதில்லை.... "காலம் வரும்போது கேட்பேன்" என்றாயே எப்போதும் காலன் வந்து விட்டானே..ஏன்? சொல்லு மாப்ள சொல்லு! அங்கே அப்பா அழைத்ததால் சென்றாயே, இங்கே அப்பா என்றழைக்கும் எம் மருமக்களுக்கு என்ன பதில்? சொல்லு மாப்ள சொல்லு...

சுதந்திர தின கொண்டாட்டம்

இல்லாததொண்ணுக்கு எதுக்குடா இந்த கொண்டாட்டம்? பசியாற ருசியாக உண்ணத்தான்  முடிகிறதா? புலாலுணவு கூடாதென்றால் கூடாதென்கிறான். மாட்டுக்கறி வேண்டுமென்றால்  மனிதனையே கரியாக்குகிறான் ! ஆட்டுக்கறியாவது ஆக்கலாமென்றால்  அசலைமட்டும் வெட்டாதே என்கிறான்! பிரியாணியாக ஆக்கிவிட்டால்  அண்டாவையே அபேஷாக்கிவிடுகிறது  அக்ரஹார அரக்கர் கூட்டம்! இல்லாததொண்ணுக்கு எதுக்குடா இந்த கொண்டாட்டம்? துடுக்காக மிடுக்காக உடுக்கத்தான் முடிகிறதா? ஹிஜாப் அணிவதென்றால் கூடாதென்கிறான்!  அரைகுறையாக அலையலாமென்றால்  அபச்சாரம் அபச்சாரம்  கலாச்சாரம் போச்சென்கிறான் ! கலாச்சாரத்தைக் காப்பாற்றலாமென்றால்  காவி காவாலிகள் கலவிக்கழைக்கின்றார் ! இல்லாததொண்ணுக்கு எதுக்குடா இந்த கொண்டாட்டம்? தெய்வங்களை தேவதைகளாய் பூஜிக்கவாவது முடிகிறதா? தேவாலயங்களை தீக்கிரையாக்குகிறான்.  மசூதிகளை மண்மேடுகளாகவே மாற்றி விட்டான். உனக்கான சாமியிடமே வந்தாலும் உள்ளேயே விட மறுக்கிறான்.  சாமியையே மாமிக்கு மட்டும்தான் காட்டுவாளாம்! உரிமையென உறுமினால் உடைமையி...

அச்சுறுத்தும் 2018

உடனிந்தே  உடைந்த உடமை... மறக்க முடியாத மன உளைச்சல்... தூக்கமில்லா இரவு... கடினமான காத்திருப்பு... விடைகளில்லாமல்  விரயமான வினாக்கள்... எதிர்வினைகளே இயல்பாகிபோன எதிர்பார்ப்புகள்... உடல் நுனிகள் மருத்த நியுயார்க் நகர நடுங்கும் குளிர்... பனிப்படலத்தில் பதிந்துபோன பலமற்ற பாதங்கள். ..  தன்னிலை மறந்த தனிமை... வரம்பு அற்ற  வரிசைகள்... காசிருந்தும் கைமாற மறுக்கும் காஃபி குவளைகள்... தலைச்சாய்க்க இயலா தன்னிலை மறந்த தூக்கம்... படுக்க இயலா பரிதவிப்பு... கலங்கும் கண்ணில் கண்ணாடி கண்ணீர்... அச்சுறுத்தும் ஆரம்பம்!!