சுதந்திர தின கொண்டாட்டம்
இல்லாததொண்ணுக்கு எதுக்குடா இந்த கொண்டாட்டம்?
பசியாற ருசியாக உண்ணத்தான் முடிகிறதா?
புலாலுணவு கூடாதென்றால் கூடாதென்கிறான்.
மாட்டுக்கறி வேண்டுமென்றால்
மனிதனையே கரியாக்குகிறான் !
ஆட்டுக்கறியாவது ஆக்கலாமென்றால்
அசலைமட்டும் வெட்டாதே என்கிறான்!
பிரியாணியாக ஆக்கிவிட்டால்
அண்டாவையே அபேஷாக்கிவிடுகிறது
அக்ரஹார அரக்கர் கூட்டம்!
இல்லாததொண்ணுக்கு எதுக்குடா இந்த கொண்டாட்டம்?
துடுக்காக மிடுக்காக உடுக்கத்தான் முடிகிறதா?
ஹிஜாப் அணிவதென்றால் கூடாதென்கிறான்!
அரைகுறையாக அலையலாமென்றால்
அபச்சாரம் அபச்சாரம் கலாச்சாரம் போச்சென்கிறான் !
கலாச்சாரத்தைக் காப்பாற்றலாமென்றால்
காவி காவாலிகள் கலவிக்கழைக்கின்றார் !
இல்லாததொண்ணுக்கு எதுக்குடா இந்த கொண்டாட்டம்?
தெய்வங்களை தேவதைகளாய் பூஜிக்கவாவது முடிகிறதா?
தேவாலயங்களை தீக்கிரையாக்குகிறான்.
மசூதிகளை மண்மேடுகளாகவே மாற்றி விட்டான்.
உனக்கான சாமியிடமே வந்தாலும் உள்ளேயே விட மறுக்கிறான்.
சாமியையே மாமிக்கு மட்டும்தான் காட்டுவாளாம்!
உரிமையென உறுமினால் உடைமையிழந்து உயிரிழக்கிறோம்.
இல்லாததொண்ணுக்கு எதுக்குடா இந்த கொண்டாட்டம்?
தண்ணீர் தண்ணீர் என்றாலும் தாகம் தான் தணிக்கிறதா?
தன்வழியில் தடம்பிறளா நல்நதியை
தனதாக்கி தயாரித்தார் தடுப்பணைகள்.
தட்டிக்கேட்டால் தண்டனைதான் தாராளம்
தண்ணீர் மட்டும் தரவே இல்லை.
குடிக்க நீர் இல்லை என்றாலும்
கோலாக்களின் கோலாகலம் குறைவதே இல்லை.
இல்லாததொண்ணுக்கு எதுக்கடா இந்த கொண்டாட்டம்?
உன்னுயிர் நன்னுயிரதனை தற்காக்க முடிகிறதா?
உயிர்காக்கும் மருத்துவம் உடனே உனக்குண்டா ?
உயிர்க்காற்றின்று தானே உறங்கி போயின பிஞ்சுயிர்கள்.
உயிர் உயிர் என்றால் உன்னுயிர் என் மயிரடா என்கிறானே!
உறங்கிய உயிர்களை உறைவிடம் சேர்க்க ஊர்தியாவது உனக்குண்டா?
உயர்சாதிக்காரனுக்குத்தானே உரியன உடைத்தாயின!
இல்லாததொண்ணுக்கு எதுக்குடா இந்த கொண்டாட்டம்?
தட யில்லா விடுதலை
தினந்தோறும் வேண்டுமா….சொல்
''பாரத் மாதாக்கே ஜே''
இதுக்கு தட சாமியும் சொல்லாது ஆசாமியும் சொல்லாது!
வெள்ளக்காரங்கிட்ட கெடச்சது
கொள்ளக்காரங்கிட்ட கெடய்க்கலயே!
பாமரனுக்கான விடுதலய
பாப்பாங்கிட்ட விட்டுட்டமே!
இல்லாததொண்ணுக்கு எதுக்குடா இந்த கொண்டாட்டம் ?
Comments
Post a Comment