எதுடா நீதி?
பெரும்பான்மை நீ பேசினா சமூகநீதி!
சிறுபான்மை நான் பேசினா சாதியவாதமா?
தாழ்த்தியவன் நீ பேசினா சமூகநீதி!
தாழ்த்தப்பட்டவன் நான் பேசினா சாதியவாதமா?
ஒடுக்கியவன் நீ பேசினா சமூகநீதி!
ஒடுக்கப்பட்டவன் நான் பேசினா சாதியவாதமா?
ஆண்டவன்-னு நினைக்கிற நீ பேசினா சமூக நீதி!
அடக்கப்பட்டவன் நான் பேசினா சாதிய வாதமா?
அடித்தவன் நீ பேசினா சமூக நீதி!
அடிப்பட்டவன் நான் பேசினா சாதிய வாதமா?
அனுபவித்தவன் நீ பேசினா சமூக நீதி!
அனுமதி மறுக்கப்பட்டவன் நான் பேசினா சாதிய வாதமா?
உலகம் பார்க்க நீ செய்வது சமூக நீதி!
உலகுக்கு உன்னை காட்ட நான் செய்வது சாதிய வாதமா?
பணக்காரன் நீ போட்டா தர்மம்!
பசித்தவன் நான் எடுத்தா திருட்டா?
என்னடா பிரச்சினை உனக்கு?
எதற்கடா இத்தீராத வன்மம் உனக்கு?
சமநீதி வேண்டும் எனக்கு!
சமத்துவமும் வேண்டும் எனக்கு!
என்ன உலகமடா இது?
பாதிக்கப் பட்டவன் நான் பேசினாலும் -என்னை
பாதித்தவன் அவன் பேசினாலும்
ஒரே விதனமான எதிர் வினை தானா?
குற்றமிழைத்தவன் நீ பேசலாம்...
நிரபராதி நான் பேசலாகாதா?
குரலில்லாமலிருந்தேன்!
குரலெழுப்பவே கூடாதா?
அடி வாங்கியவனாக பேசுகிறேன்;
பேசவிடுங்கடா.
அடக்கப் பட்டவனாக பேசுகிறேன்;
பேசவிடுங்கடா.
அனுமதி மறுக்கப் பட்டவனாக பேசுகிறேன்;
பேசவிடுங்கடா.
பாதிப்படைந்தவனாக பேசுகிறேன்;
பேசவிடுங்கடா.
வலி நிறைந்த வார்த்தைகள் அவை
வாயிலிருந்து பிரசவிக்கவாவது விடுங்கள்
வருமுன்னே அதையும் கொன்று விடாதீர்கள்!
வாய் திறந்து அழுது கொள்கிறேன்!!
அதுவும் கூடாதென்றால்
"இந்த நாடும் நாட்டு மக்களும் நாசமாய் போகட்டும்"
"இங்கு வீசும் காற்றில் விசம் பரவட்டும்"
"ஒரு கோவிட்-19 இல்ல ஒன்பது கொரோனாக்கள்
உற்பத்தி ஆகட்டும்"
நீங்களும் சாவுங்கள்; நானுன் செத்து தொலைகிறேன்!
Comments
Post a Comment