பரிமாணமும் பரிணாமமும்
பரிணாமம் ...?பரிமாணம் ...?
கேள்விகள் கேள்விகள் கேள்விகள் மட்டுமே.
சார்லஸ் டார்வின் அவர்களின் படிநிலை வளர்ச்சி கொள்கை(Evalution Theory) தான் அமீபா முதல் மனித இனம் வரை பரிணாம வளர்ச்சி அடைந்திருப்பதை நமக்கு அறியத் தருகிறது. இதன் அடிப்படையில் தான் ஓருயிர் உயிரி முதல் பாலூட்டிகள் வரை பட்டியலிடப்பட்டுள்ளன என்பதும் நாம் அறிந்ததே. அதன்படி கணக்கிட்டால்
மனிதனுக்கு அடுத்தபடியான உயிரினங்கள் உலகில் இருக்கின்றனவா?
அப்படி இருக்கிறதென்றால் நமக்கு தெரியாமல் இருப்பதேன்??
அவைகளைத் தான் வேற்று கிரகவாசிகள்(Aliens) என்று நாம் அழைக்கிறோமா???
பரிமாணத்தை திரைப்படங்களில் 2D ,3D என 9D வரையில் வளர்ந்துவிட்டிருப்பதை வைத்து புரிந்துகொள்ளலாம்.
வேகத்தை ஒலியின் வேகம், ஒளியின் வேகம், அலைக்கற்றைகளின் 2G...5G என்பவை மூலம் தெரிந்து கொள்ளலாம்.
இவைகளைப் பார்க்கும்போது நீளம்,அகலம்,உயரம் போன்று வேகமும் காலமும்தான் அடுத்தடுத்த பரிமாணங்கள் எனத்தோன்றுகிறதுதானே?
பறக்கும் தட்டுகள் இதன் அடிப்படையில்தான் இயங்குகின்றனவா?
வேற்றுகிரக வாசிகள் காலப்பயணங்கள் மேற்கொள்கிறார்களா??
காலங்கள் கடக்கும்போதுதான் மனிதன் அடுத்த நிலையை அடைய முடியுமா?
அதிக பரிமாணங்களை அறிவதன் மூலம் தான் வளர்ச்சி சாத்தியமா?
அப்படியானால்,
ஒருசெல் உயிரியாக இருந்த அமீபா முன்னும் பின்னும் மட்டுமே நகர்ந்திருந்திக்க வேண்டும்...
பின்பு பரிமாணம் அறிந்து உயிரிகள் பக்கவாட்டில் நகர்ந்திருக்கலாம்...
அதன் பிறகே மற்றோரு பரிமாணம் அறிந்து மேல் நோக்கி நகர்ந்திருக்கலாம்...
படிப்படியாக வளர்ந்த மனிதன் இப்போது ஆகாயத்தில் பறக்கிறான்.
இன்னும் ஆகாய வெளியிலும்,நிலப்பகுதிக்குள்ளும்,கடலுக்குள்ளும் பயணிக்கவும் தெரிந்து கொள்ளவும் அதிகமான தேவை இருக்கவே செய்கிறது.
ஓருயிரியை விட அதிகம் தெரிந்திருக்கும் மனிதனைப் போல இவைகளையெல்லாம் வேற்றுகிரகவாசிகள் தெரிந்து வைத்துள்ளார்களா?
அமீபாக்களுக்கு மனிதன் அந்நிய சக்தியாக இருப்பது போல் வேற்றுகிரக வாசிகளும் மனிதனுக்கு அந்நிய சக்தியாக இருக்கிறார்களா?
அமீபாக்களுக்கு மனிதனைப் போல மனிதக்கு வேற்றுகிரக வாசிகளா?
ஓர் செல் உயிரியை விட கூடுதல் பரிமாணங்களை அறிந்த புத்திசாலியான குரங்கும், குரங்கை விட அதிக பரிமாணங்களை அறிந்து அதிக புத்திசாலியான மனிதனும் அவர்களிடமிருந்து பிரிந்து தங்களுக்கென தனியான வாழ்க்கை முறைகளை தேர்ந்தெடுத்துக் கொண்டதை போலத் தான் வேற்றுகிரக வாசிகளும் மனிதனை விட்டு பிரிந்து தங்கள் வாழ்வை வாழ்கிறார்களா?
ஓருயிரிக்கு மனிதனின் இருப்பு தெரிந்திருக்குமா?
தெரிந்திருந்தால் வியந்துதானே பார்த்துக்கொண்டிருக்கும்!?
மனிதன் அவற்றை நுண்ணோக்கியில் வைத்து ஆய்வுக்குட்படுத்துவது;
வெள்ளெலியை பரிசோதனைகளுக்கு உட்படுத்துவது;
குரங்குகளை கூண்டுக்குள் அடைத்து வைப்பதும்
அவைகளுக்கு துன்பமாயிருக்குமென்பது மனிதனுக்கு தெரிந்திருக்கிறதா?
மற்ற உயிர்களை மனிதன் பரிசோதிப்பது போலத்தான் மனிதனைவிட அடுத்த நிலையிலுள்ள உயிரிகளுக்கும் மனிதனை பரிசோதனைக்குட் படுத்துகிறதா?
அல்லது பூமிப்பந்து தான் அவர்களின் சோதனைக் கூடமா?
அதிலும் ஒருவித பரிசோதனை முறைதான் COVID-19 ஆ??
Comments
Post a Comment