பழங்கால தமிழர்களும் வேதாகம அறிவும்.
பழங்கால தமிழர்களுக்கு வேதாகம அறிவு புகுத்தப் பட்டுள்ளது என்கிற என் கருத்தை உங்களில் பலரும் ஏற்காமல்; "கல் தோன்றி, மண் தோன்றா காலத்து முன் தோன்றி மூத்த தமிழ் எங்கள் தமிழ்"...என்று முழங்குவது என் காதுகளில் மட்டுமல்ல; என் உள்ளிலும் தொனிக்கத்தான் செய்கிறது...நானும் தமிழன் தானே!?
டார்வின் தத்துவத்தின் படி கல் மண் எல்லாம் தொன்றுவதற்கு முன் மனிதனும் மொழிகளும் தோன்றி இருக்க வாய்ப்பே இல்லை. அது ஒரு பக்கம் இருக்கட்டும்.
சமக் காலத்து நிகழ்வுகள் எல்லாம் ஒன்றுக்கொன்று தொடர்பு உடையவை என்று கூறும் கேயாஸ் தத்துவம், ஒரு பட்டாம் பூச்சி இறக்கையின் படபடப்பிறக்கும் ஒரு பூகம்பத்திற்கும் கூட தொடர்பு உண்டு என்றும் கூறுகிறது. அப்படி என்றால் இவ்வுலக நாதனின் உதட்டசைவு ஏன் சம காலத்து நம்மவர்களின் எழுத்தாணியை அசைத்திருக்கக் கூடாது??????
உங்கள் சந்தேகம் எனக்கும் தான்..ஏன் நம்மவர் எழுத்தாணியின் அசைவு இவ்வுலக பிதாவின் உதட்டை அசைத்திருக்க முடியாது? என்பது தானே?
மேலே படியுங்கள்,
நமது எத்தனை படைப்புக்கள் பிற மொழிகளில் மொழிமாற்றம் செய்யப்பட்டுள்ளன?? எத்தனை கோலிவுட் காவியங்கள் ஹாலிவுட் சென்றுள்ளன??
அதையே திருப்பிப் போட்டுப் பாருங்கள் அப்போது புரியும். எப்படி Mrs.Doubt fire நமது அவ்வை சண்முகி ஆனாளோ அப்படியே தான் இதுவும் என்கிறேன் நான்.
இனி சில பல மேற்கோள்களை காணலாம்,

- மத்தேயு 12:34 "இருதயத்தின் நிறைவினால் வாய் பேசும்." "அகத்தின் அழகு முகத்தில் தெரியும்."
- எசேக்கியேல்16:44"இதோ பழமொழி சொல்லுகிறவர்கள் எல்லோரும் உன்னைக்குறித்து தாயைப் போல பிள்ளை என்று பழமொழி சொல்லுவார்கள்" "தாயைப் போல பிள்ளை நூலைப் போல சேலை."
- மத்தேயு12:37 "உன் வார்த்தைகளினாலே நீதிமான் என்று தீர்க்கப்படுவாய்; அல்லது உன் வார்த்தைகளினாலே குற்றவாளி என்று தீர்க்கப் படுவாய்." "தவளை தன் வாயால் கெடும்."
- நீதிமொழிகள்26:17"வழியே போகையில் தனக்கடாத வழக்கில் தலையிடுகிறவன் நாயைக் காதைப் பிடித்திழுக்கிறவனைப் போலிருக்கிறான்." "வேலிக்குள்ள போற பாம்ப வேட்டிக்குள்ள விட்ட கதையால்ல இருக்கு.."
- நீதிமொழிகள்9:7 "பரியாசக்காரனைக் கண்டிக்கிறவன் இலச்சையடைகிறான்; துன் மார்க்கனைக் கண்டிக்கிறவன் தன்னைக் கறைப்படுத்திக் கொள்ளுகிறான்." "நாயை அடிப்பானேன்; __ யை சுமப்பானேன்?"
- சங்கீதம் 133:1 "இதோ, சகோதரர் ஒருமித்து வாசம்பண்ணுகிறது எத்தனை நன்மையையும் எத்தனை இன்பமுமானது?" "கூடி வாழ்ந்தால் கோடி நன்மை."
- எபிரேயர்12:11 "எந்த சிட்சையும் தற்காலத்தில் சந்தோசமாய்க் காணாமல் துக்கமாய்க் காணும்; ஆகிலும் பிற்காலத்தில் அதில் பழகினவர்களுக்கு அது நீதியாகிய சமாதான பலனைத் தரும்." "மூத்தோர் சொல்லும் முதிர் நெல்லிக்காயும் முதலில் கசக்கும் பிறகு இனிக்கும்."
- நீதிமொழிகள் 26:4 "மூடனுக்கு அவன் மதியீனத்தின்படி மறுஉத்தரவு கொடாதே; கொடுத்தால் நீயும் அவனைப்போலாவாய்." "பன்றி யோடு சேர்ந்த கன்றும் __ தின்னும்."
- நீதிமொழிகள்23:21 "குடியனும் போஜனப் பிரியனும் தரித்திரராவார்கள்." "குடி குடியைக் கெடுக்கும்."
- நீதிமொழிகள்26:3 "குதிரைக்குச் சவுக்கும், கழுதைக்குக் கடிவாளமும், மூடனுடைய முதுகுக்குப் பிரம்பும் ஏற்றது." அடி செய்கிற உதவி அண்ணன் தம்பி செய்ய மாட்டான்.
- நீதிமொழிகள்22:8 "அநியாயத்தை விதைக்கிறவன் வருத்தத்தை அறுப்பான்." "வினை விதைத்தவன் வினை அறுப்பான்; தினை விதைத்தவன் தினை அறுப்பான்."
- நீதிமொழிகள்26:22 "கோள்காரனுடைய வார்த்தைகள் விளையாட்டுப் போலிருக்கும்; ஆனாலும் அவைகள் உள்ளத்திற்குள் தைக்கும்." "வாழைப்பழத்துல ஊசி இறக்குவது போல.."
- நீதிமொழிகள்26:27 "படு குழியை வெட்டுகிறவன் தானே அதில் விழுவான்; கல்லைப் புரட்டுகிறவன் மேல் அந்தக் கல் திரும்ப விழும்." "கத்தி எடுக்கிறவன் கத்தியால தான் சாவான்."
- நீதிமொழிகள்26:23 "நேச அனலைக் காண்பிக்கிற உதடுகளோடு கூடிய தீய நெஞ்சம் வெள்ளிப் பூச்சு பூசிய ஓட்டைப் போலிருக்கும்." "மின்னுவதெல்லாம் பொன்னல்ல..."
- யோபு 23:12 "...அவருடைய வாயின் வார்த்தைகளை எனக்கு வேண்டிய ஆகாரத்தைப் பார்க்கிலும் அதிகமாய்க் காத்துக் கொண்டேன்." "செவிக்குணவு இல்லாத போது சிறிது வயிற்றுக்கும் ஈயப்படும்."
- சங்கீதம் 1:1 "துன்மார்க்கருடைய ஆலோசனையில் நடவாமலும், பாவிகளுடைய வழியில் நில்லாமலும்,பரியாசக் காரர் உட்காரும் இடத்தில் உட்காராமலும்." "துஷ்டனைக் கண்டால் தூர விலகு."
அருமையான தொகுப்பு. வாழ்த்துக்கள். நிச்சயமாகவே பழங்கால தமிழர்களுக்கு வேதாகம அறிவு இருந்திருக்கும் என்றே படுகிறது.
ReplyDeleteதமிழில் இது போன்ற பழமொழிகள் முதலில் எப்போது புழங்கியது என்பதைத் தேடிக் கொண்டிருக்கிறேன். உங்கள் அறிவுக்கு எட்டினால். பகிர்ந்து கொள்ளுங்கள். மீண்டும் வாழ்த்துக்கள்.
நன்றி எட்வின்.
ReplyDeleteஆஹா வாத்தியாரே கலக்கல் .யோசிக்க வச்சிட்டீங்க அருமையான மேற்கோள்கள் ,ஆரம்பமே வேதாகமம் .உங்கள் ப்ளாக் ஆசீர்வதிக்கபடும் .அதற்குரிய படங்களையும் போட்டிருந்தால் இன்னும் பார்க்க நன்றாக இருந்திருக்கும்
ReplyDeleteகேயாஸ் தத்துவம், ஒரு பட்டாம் பூச்சி இறக்கையின் படபடப்பிறக்கும் ஒரு பூகம்பத்திற்கும் கூட தொடர்பு உண்டு என்றும் கூறுகிறது///////////////தசாவதாரத்துல கேட்ட மாதிரியே இருக்கு //சரி போட்டு
ReplyDeleteநெறையவே ஆராய்ச்சி பண்ணி எழுதி இருக்கீங்க.
ReplyDeleteவாழ்த்துக்கள் திரு.மச்சான் !