பரிமாணமும் பரிணாமமும்
பரிணாமம் ...?பரிமாணம் ...? கேள்விகள் கேள்விகள் கேள்விகள் மட்டுமே. சார்லஸ் டார்வின் அவர்களின் படிநிலை வளர்ச்சி கொள்கை(Evalution Theory) தான் அமீபா முதல் மனித இனம் வரை பரிணாம வளர்ச்சி அடைந்திருப்பதை நமக்கு அறியத் தருகிறது. இதன் அடிப்படையில் தான் ஓருயிர் உயிரி முதல் பாலூட்டிகள் வரை பட்டியலிடப்பட்டுள்ளன என்பதும் நாம் அறிந்ததே. அதன்படி கணக்கிட்டால் மனிதனுக்கு அடுத்தபடியான உயிரினங்கள் உலகில் இருக்கின்றனவா? அப்படி இருக்கிறதென்றால் நமக்கு தெரியாமல் இருப்பதேன்?? அவைகளைத் தான் வேற்று கிரகவாசிகள்(Aliens) என்று நாம் அழைக்கிறோமா??? பரிமாணத்தை திரைப்படங்களில் 2D ,3D என 9D வரையில் வளர்ந்துவிட்டிருப்பதை வைத்து புரிந்துகொள்ளலாம். வேகத்தை ஒலியின் வேகம், ஒளியின் வேகம், அலைக்கற்றைகளின் 2G...5G என்பவை மூலம் தெரிந்து கொள்ளலாம். இவைகளைப் பார்க்கும்போது நீளம்,அகலம்,உயரம் போன்று வேகமும் காலமும்தான் அடுத்தடுத்த பரிமாணங்கள் எனத்தோன்றுகிறதுதானே? பறக்கும் தட்டுகள் இதன் அடிப்படையில்தான் இயங்குகின்றனவா? வேற்றுகிரக வாசிகள் காலப்பயணங்கள் மேற்கொள...