Posts

Showing posts from February, 2015

GANZALO

கன்சலோ ......16 அக்டோபர் 2014 அட்லாண்டிக் மகா சமுத்திரத்தில்,விண்ணின் விடியலைத் தேடிக் கொண்டிருக்கும் விஞ்ஞானிகளின் கண்டுபிடிப்புகளுடன் கண்ணாமூச்சி ஆடிக்கொண்டிருக்கும் மாய முக்கோணத்தின் மூலகோணமாம் பெர்முடாவே கன்சலோ-வின் வருகையை எதிர்நோக்கி ஆயத்தமாகிக் கொண்டிருந்தது. மேற்கிந்திய தீவுகளின் மேற்குப்பகுதியில் வெப்பத்துக்கு காற்றுடன் உண்டான கூடலில் உருவாக்கி,அமெரிக்க அரக்கனை அரவணைக்காமல்,காணாமலே காதல் கொண்ட கள்ளக்காதலன் பெர்முடாவை சந்திக்க 2014-ம் வருடம் அக்டோபர் 16-ம் நாள் மாலை 3 மணிக்கு வருவதாகக் கூறி இரவு 8 மணி வரை அலைய விட்டாள்; பின்பு அசைத்து எடுத்தாள்!ஆம்,அந்த கோரத் தாண்டவமாடிய கொடூரப்  புயல் தான் கன்சலோ! தற்பொழுது உயிர்வாழும் எவரும் இதுபோன்றொருப் புயலைக்கண்டதில்லை என்பது தான் நிதர்சனமான உண்மை! ஆபத்தை எதிர்கொள்ள அதன் மாந்தர்கள் ஆயத்தமான கதைதான் புதியது என்றாலும் பல பழைய நினைவுகளையும் தந்தது. கண்ணாடி சாளரங்களெல்லாம் பழுதுகள் நீக்கப் பட்டு, உள்ளே கொக்கிகள் மாட்டப் பட்டு, வெளியே பலகைகள் கொண்டு மறைக்கப்பட்டு ஆணிகளால் கடாவப்பட்டன. பர்தா அணிந்து அழகுகள் மறைக...

நான் தமிழன் டா!

                              நான் தமிழன் டா! அன்று ஒருநாள்...இரவுப்பணி முடிந்தது, எப்போதுடா  வீட்டுக்கு போலாமென்றிருந்த நேரம்..பகல் பணிக்கு வர வேண்டியவர் நோய் விடுப்புக் கூறி வரமுடியாமற் போனதால் அதிக நேரம் வேலை(அதாங்க ஓவர் டைம்) செய்ய வாய்ப்பு கிடைத்தும் மறுத்தேன்.உடனே, என் சக பணியாளினி என் மேல் கொண்ட அக்கறையால், "அதிக பணம் கிடைக்குமல்லவா? வீட்டில் போய் அப்படி என்னதான் செய்யப்போகிறாய்" என்று என்னை செல்லமாக கடிந்து கொண்டாள்."பணம் மட்டும் முக்கியமல்ல"என்று சற்று உரக்கவே கூறி விட்டேன்.எந்த பிரச்சினைகளை முன்னெடுத்தாலும் சம்பளம் வாங்கி கொண்டுதானே வேலை செய்கிறீர்கள் என்று கூறி வாயடைக்கும் மேலாளர் காதிலும் விழுந்து விட்டது(அவருக்கு கேட்க வேண்டும் என்றுதான் சொன்னேன்).எப்போதும் இல்லாத வித்தியாசமாக பார்த்துச் சென்றார்.எதோ புரிந்திருக்கிறார் என்பது மட்டும் புரிந்தது." ரௌத்திரம் பழகு"  என்ற பாரதி என் முன் தோன்றி மறைந்தார்! எனது மேற்கத்திய நண்பன் ஒருவனுடன் அரட்டையடித்துக்கொண்டிருந்தேன். அவன்:...