எதை? எதை??
தேர்வு நடந்து கொண்டிருந்தது . தேர்வு எழுதுவோர் நூற்றுக்கும் மேல்.. கண்காணிப்பாளர்கள் நான்கைந்து பேர். அவர்களின் மெல்லிய நடை... கூறிய பார்வை.... அவன் எதையுமே சட்டை செய்யவில்லை . கண் கொட்டாமல் பார்க்கிறான். எனது இடது பின் புறமிருந்து என்னை, என்னை மட்டுமே கூர்ந்துப் பார்க்கிறான். தாவணியை சரி செய்து கொண்டேன்; மீண்டும் அதே பார்வை. நான் திரும்பிப் பார்த்தால் தலை கவிழ்ந்து எழுதுவான். நான் பெண் என்பதாலோ? வெட்கம் கலந்த பயம். விடைத்தாளை திருப்பும் போது அவன் கண்கள் வெறித்து நிற்கின்றன. "மேற்பார்வையாளரிடம் சொல்லலாம்; அவன் மாட்டிக் கொள்வான்; என்னையும் பாதிக்குமே; சீருடைக்கு விடிவு காலம் வராதா?" போராட்டத்தில் என் மனம்! மனப்போராட்டம் முடிவுக்கு வந்தது, அவன் எண்ணம் புரிந்தது அவன் பருவப் பெண் தானே நானும். ஆசைக்கு இணங்க இசைந்தேன் , அவன் பார்வைக்கு விருந்தாக்க துணிந்தேன் என் விடைத்தாளை!!!