கனப்படுத்துவதில் கவனக்குறைவு...

இந்திய ராணுவம் உலக அளவில் திரும்பிப் பார்க்கச் செய்யும் அளவு உன்னத நிலையில் உள்ளது, இந்தியராகிய நமக்கு பெருமையே!!கடந்த ஆண்டு பிரான்ஸ் நாட்டின் தேசிய தினத்தில் நம் முப்படைகளும் பாரிஸ் நகரில் அணிவகுத்த போது கிடைத்த ஆரவாரத்தில் அகமகிழ்ந்து தொலைக் காட்சிப் பெட்டி முன்பு நின்றுக் கொண்டு சல்யுட் செய்தவர்களில்  நானும் ஒருவன்.
ஒவ்வொரு குடியரசு தினத்தன்றும் பிற நாட்டு நண்பர்களிடமும் நமது ராணுவ அணிவகுப்பை பார்க்கும் படிக் கூறி பெருமைப் பட்டுக்கொள்ளுவேன்.
இப்போதும் உலக சாதனையாளன் சச்சின் தெண்டுல்கர் அவர்களை கவுரவப் படுத்தும் போதும் பெருமை படுகிறேன்


 
ஆனால் சல்யுட்  செய்யும் போது இந்திய தலைமை விமானப் படை தலைவர் பிரதீப் நாயக்கின் தலையில் தொப்பி இல்லாமல் இருந்தது எனது மனதில் சிறிய வருத்தத்தை விதைத்து விட்டது.
http://cricket.yahoo.com/photos/IAF-honours-Sachin-Tendulkar_12835247173115
நான் தேசிய மாணவர் படையில் இருந்த போது தொப்பி இல்லாமல் சல்யுட் செய்த under officer மைதானத்தை பத்து முறை சுற்றி ஓடியதை எண்ணிப்  பார்க்கிறது என் நினைவுகள்...
http://www.bharat-rakshak.com/IAF/Heraldry/Miscellenous/340-Saluting.html 
சல்யுட் செய்வது எப்படி என்பது இந்த வலைத் தளத்தில் விவரிக்கப் பட்டுள்ளது... 
தலைவர்கள் சீருடையில் இருந்து தலையில் தொப்பி இல்லா விட்டால் சல்யுட் செய்வதை தவிர்க்க வேண்டும்; பிறர் சல்யுட் செய்வதை ஏற்கும் விதமாக  attention நிலையில் நின்று கொண்டால் போதுமானது.
உலக பிரசித்திப் பெற்ற ஒரு விழாவில் நமது தலைவர்கள் ஏன் இப்படி நடந்து கொள்கிறார்கள் என்று நினைக்கும் போது நெஞ்சம் கனக்காமல் என்ன செய்யும்?
எனவே,எனக்கென்னவோ அவரையும் ஒடவைக்கலாம் போலதான் தொன்றுகிறது.. உங்களுக்கு????
மேலும் சில வலைத்தளங்கள்..
http://www.google.com/images?expIds=17259,24815,25901,25907,26268,52728&sugexp=ldymls&pq=%3Ctable%3E%3Ctr%3E%3Ctd%3E%3Ccenter%3E%3Ca+href%3D%22http://universalscraps.com%22+target%3D%22_blank%22%3E%3Cimg+src%3D%22http://c.universalscraps.com/files/en/happy.birthday/birthday_133.gif%22+border%3D%220%22+alt%3D%22Orkut+Scraps+-+Happy+Birthday%22%3E%3C/a%3E%3Cbr%3E%3Cbr%3E%3Cdiv+style%3D%22border:0px%3B+font-size:12px%3B%22%3E%3Cb%3E%3Ca+href%3D%22http://universalscraps.com%22+target%3D%22_blank%22%3E%5Bteal%5D%5Bu%5DOrkut+Scraps%5B/u%5D%5B/teal%5D%3C/a%3E+-+%3Ca+href%3D%22http://www.universalscraps.com/comments.php%3Ff%3Dhappy.birthday%22+target%3D%22_blank%22%3E%5Bred%5DHappy+Birthday+Scraps%5B/red%5D%3C/a%3E%3C/b%3E%3C/center%3E%3C/td%3E%3C/tr%3E%3C/table%3E%3Cbr%3E&q=indian+army+salute&cp=16&hl=en&rls=com.microsoft:en-us:IE-ContextMenu&wrapid=tljp1283867342347130&um=1&ie=UTF-8&source=univ&ei=50KGTMbXEZTL4AaC6tHSBA&sa=X&oi=image_result_group&ct=title&resnum=4&sqi=2&ved=0CC4QsAQwAw&biw=1345&bih=496

Comments

  1. ஹா ஹா ஹா ஹா ,,,தொப்பி!! தொப்பி!!!

    ReplyDelete
  2. பிரான்ஸ் நாட்டின் தேசிய தினத்தில் நம் முப்படைகளும் பாரிஸ் நகரில் அணிவகுத்த போது கிடைத்த ஆரவாரத்தில் அகமகிழ்ந்து தொலைக் காட்சிப் பெட்டி முன்பு நின்றுக் கொண்டு சல்யுட் செய்தவர்களில் நானும் ஒருவன்/////////////////////
    என்னைப் போல் ஒருவன்!!!

    ReplyDelete

Post a Comment

Popular posts from this blog

இரங்கற்பா

பழங்கால தமிழர்களும் வேதாகம அறிவும்.

எதுடா நீதி?