எனக்கொரு உண்ம தெரிஞ்சாகணும்.
"மக்ளே எனக்கு வயசாகிட்டே இருக்குலாப்பா..எனக்க காலத்துக்கு பொறவு ஒனக்கு யாரு இருக்கா? ஒண்ணு கெடக்க ஒண்ணு ஆயிட்டுனா ஒன்ன யாருடே பாத்துகிடுவா?ஒனக்கு ஒரு கல்யாணத்த செய்து வச்சிட்டா இந்த கட்ட நிம்மதியா போயி சேந்துரும். நீதான் சொன்னா கேக்க மாட்டக்க". இது தாயின் குமுறல். "ஆமாம்மா, நானும் ஒன்கிட்ட சொல்லனும்னு தான் இருந்தேங். ஏங்கூட ஒரு புள்ள வேலை பாக்கா.நல்லா இருப்பா.நல்ல கொணம்.ஒனக்கும் புடிக்கும். நம்ம புள்ளதாம்ம". இந்த மகனின் பதில் அவளை இருபது வருடங்களுக்கு பின்னால் அழைத்து சென்று விட்டது. அவனிடம் சொல்லாதது அவளின் தவறுதான். கண்ணீர் வடிய மனம் கடந்த காலத்தை அசை போட்டுக் கொண்டிருந்தது.... வீட்டில் மூத்த மகள் என்பதால் தம்பி தங்கைகளை கவனித்து கொள்ள பள்ளிக்கூடத்தை நினைத்துக்கூட பார்த்திருக்க வில்லை.அறிவிலி ஆதலால் தானோ கட்டியவன் விட்டு சென்று விட்டான்; கையில் ஒரு குழந்தையோடு. இப்போது அவள் ஒரு கைம்பெண். கையில் காசில்லை.கூலிக்கு ஓடி ஓடி உழைத்தாலும் கால் வயிற்றுக்கு தான் கஞ்சி கிட்டியது.காலங்கள் கடந்து போயின.மகனை படிக்க வைத்து விட வேண்டும். என்னுடைய து...