போலி தேச பக்தி
தேச துரோகியாகவே இருக்க விரும்புகிறேன்-நான் தேச விரோதியாகவே மாற விரும்புகிறேன். சாமி கும்பிடுகிறேன் என்பதை மீண்டும் கும்புடுறேன் சாமி என்றாக்குவது தான் உங்கள் தேச பக்தி என்றால் மதிப்பு மிக்க மனிதனை மாக்களினும் மட்டமாக்குவது தான் உங்கள் தேச பக்தி என்றால் மாட்டுக்காக மனிதனை மனுதாபிமான மற்று அடித்தே கொல்வதுதான் உங்கள் தேச பக்தி என்றால் கோமானேயானாலும் கோமாதாவை கும்பிடுவதும் கோமியத்தை குடிப்பதுவும் தான் உங்கள் தேச பக்தி என்றால் மதத்தின் பெயரால் மனிதனுக்கு மரணத்தை கொடுப்பதுதான் உங்கள் தேச பக்தி என்றால் குடிக்கும் நீருக்காக பூர்வகுடிமகனை அடித்து உதைப்பதை வேடிக்கைப் பார்ப்பதுதான் உங்கள் தேச பக்தி என்றால் தன் நிலம் நாடி நடக்கும் புலம் பெயர் தொழிலாளரின் நடைபயணத்தை கேலிபேசி கேளிக்கையாக்குவதுதான் உங்கள் தேச பக்தி என்றால் கஞ்சிக்கில்லாமல் கதரும் கடைகுட்டியின் பசி போக்க கடைவெளிக்கு செல்லாமல் அநாகரீக அதிகாரவர்க்கத்தின் அடக்குமுறைக்கு அடிபணிந்திருப்பதுதான் உங்கள் தேச பக்தி என்றால் நோயுற்ற பச்சிளம் குழந்தைகளின் உயிர் காக்க தன்காசில் உயிர் காற்று வாங்கினால் பரிசு ...