சுதந்திரம் விற்பனைக்கு...
ஒருவன் விலை கூடுன வண்டில வந்து எறங்குவான்... கொடிய ஏத்திட்டு ஏதோ பேசுவான்... அப்புறம் ஆரஞ்சி முட்டாய் குடுப்பான்... நாம முட்டாய தின்னுட்டு கைய நக்கிட்டு நிக்கணும்.. அவங் முட்டாய பையோட கொண்டு போயிருவாங்! அயல் நாட்டு காரன் ஆகாய விமானத்துல வாரான்.. அரசியல் வாதிகளை கூட்டிவச்சி ஏதேதோ பேசுறான். புரியலனாலும் நம்மாளு தலையாட்டிடுறான். போதைய கொடுத்துட்டு போதுமானதொட போயிருறான் அவன். இப்பவும் நம்மாளு நம்மள நக்கிட்டு நிக்க வுட்டுருறான். நாம குடிச்சிட்டு சாதிக்கும் மதத்துக்கும் மட்டும் அடிச்சிக்குவோம்.