Posts

Showing posts from July, 2014

தலை பிரசவம்

Image
ஒரு நல்ல புகைப்படக்கருவி வாங்க வேண்டும் என்பது நீண்ட நாள் ஆசை,ஆர்வம், விருப்பம் என என்ன வேண்டுமானாலும் வைத்துக்கொள்ளலாம்.குடும்ப சூழல்,வருமானம் இவற்றை எல்லாம் கருத்தில் கொண்டு மனதினுள் சிறைபட்ட கைதியாக விடுதலையின் நாளை எதிர்நோக்கி ஒரு நீண்ட காத்திருப்பு.காரியம் கை கூட வேண்டும் என்றால் அநேக தடைகளை தாண்ட வேண்டும் என்ற இயற்கையின் நியதியை நியாயப்படுத்திக் கொண்டிருந்த வேளைக்கு  ஒரு முற்றுபுள்ளி வைக்கும் நேரம் வந்து விட்டது. அப்பாடா.....! எனது ஏக்கத்திற்கு ஒரு விடிவு வந்து விட்டது;கற்பனைக்கு ஒரு வடிகால் கிடைத்துவிட்டது. பிரவசத்திற்கு பின் கிடைக்கும் நிம்மதி சந்தோசம் என்று எதையுமே அனுபவித்திராத எனக்கு அந்த உணர்வு கிடைத்து விட்டது. பிறந்த குழந்தையை முதல் முதன்முதலாய் பார்க்கும் தாயின் முக மலர்ச்சி இப்போது என்னில்... எனது கண் காணும் இயற்கையின் இனிமையை கணனியில் கண்ட பொது கண்கள் நிறைந்துதான் போனது.யான் பெற்ற பேறு பெருக இவ்வையகம் என  நினைத்ததின் முடிவே இந்த பதிவு.