ஆரம்பாகமம்..
இது தான் எனது முதல் பதிவு........கண்ணையும் காதையும் நன்றாக படைத்து ரசிக்கச் செய்த கடவுள் கையையும் வாயையும் அந்த அளவுக்கு சிறப்பாக செய்ய வில்லையே என்று என்னை படைத்தவனை நொந்துக்கொண்டு.... என்ன எழுதலாம்? எப்படி எழுதவேண்டும்?? எப்படி பட்டதை எழுதினால் எல்லோரும் விரும்புவார்கள்??? என்று வயதுக்கு வந்த பெண்ணைப் போல தலைப் பிள்ளையைக் குறித்து ஆழ்ந்து சிந்தித்துக் கொண்டிருக்கும் போதே... இருவர் எனக்கு குழந்தை பிறந்து விட்டது போல வந்து உற்று நோக்கி, இல்லை என்ற உடன் உட்கார்ந்தும் கொண்டார்கள்(சிந்திக்கவா முடிகிறது???). குழந்தை பிறந்தால் தான் போவார்கள் போல!!!!(ஹிஹிஹிஹி இப்படியும் சிலர்) இதற்காகவே நான் முதல் குழந்தையை பெற வேண்டி நிர்பந்திக்க பட்டேன். அதனால் நானே என் கனவை தொலைத்து.... ஏதாவது பெற்றால் போதும் என்ற எண்ணத்தில், முதல் பிரசவம்..... மற்றவர்கள் மன்னிக்கவும்(ஏதோ அநேகர் காத்துக் கிடப்பது போல!). நீங்க ஏசினாலும் சரி; பேசினாலும் சரி வலைத் தளத்திற்கு ஓர் எழுதுகோல் கிடைத்து விட்டது. மீண்டும் சந்திக்கலாம்!