Posts

Showing posts from 2010

கனப்படுத்துவதில் கவனக்குறைவு...

Image
இந்திய ராணுவம் உலக அளவில் திரும்பிப் பார்க்கச் செய்யும் அளவு உன்னத நிலையில் உள்ளது, இந்தியராகிய நமக்கு பெருமையே!!கடந்த ஆண்டு பிரான்ஸ் நாட்டின் தேசிய தினத்தில் நம் முப்படைகளும் பாரிஸ் நகரில் அணிவகுத்த போது கிடைத்த ஆரவாரத்தில் அகமகிழ்ந்து தொலைக் காட்சிப் பெட்டி முன்பு நின்றுக் கொண்டு சல்யுட் செய்தவர்களில்  நானும் ஒருவன். ஒவ்வொரு குடியரசு தினத்தன்றும் பிற நாட்டு நண்பர்களிடமும் நமது ராணுவ அணிவகுப்பை பார்க்கும் படிக் கூறி பெருமைப் பட்டுக்கொள்ளுவேன். இப்போதும் உலக சாதனையாளன் சச்சின் தெண்டுல்கர் அவர்களை கவுரவப் படுத்தும் போதும் பெருமை படுகிறேன்   ஆனால் சல்யுட்  செய்யும் போது இந்திய தலைமை விமானப் படை தலைவர் பிரதீப் நாயக்கின் தலையில் தொப்பி இல்லாமல் இருந்தது எனது மனதில் சிறிய வருத்தத்தை விதைத்து விட்டது. http://cricket.yahoo.com/photos/IAF-honours-Sachin-Tendulkar_12835247173115 நான் தேசிய மாணவர் படையில் இருந்த போது தொப்பி இல்லாமல் சல்யுட் செய்த under officer மைதானத்தை பத்து முறை சுற்றி ஓடியதை எண்ணிப்  பார்க்கிறது என் நினைவுகள்... http:...

பழங்கால தமிழர்களும் வேதாகம அறிவும்.

பழங்கால தமிழர்களுக்கு வேதாகம அறிவு புகுத்தப் பட்டுள்ளது என்கிற என் கருத்தை உங்களில் பலரும் ஏற்காமல்; "கல் தோன்றி, மண் தோன்றா காலத்து முன் தோன்றி மூத்த தமிழ் எங்கள் தமிழ்"...என்று முழங்குவது என் காதுகளில் மட்டுமல்ல; என் உள்ளிலும் தொனிக்கத்தான் செய்கிறது...நானும் தமிழன் தானே!? டார்வின் தத்துவத்தின் படி கல் மண் எல்லாம் தொன்றுவதற்கு முன் மனிதனும் மொழிகளும் தோன்றி இருக்க வாய் ப்பே  இல்லை. அது ஒரு பக்கம் இருக்கட்டும். சமக் காலத்து நிகழ்வுகள் எல்லாம் ஒன்றுக்கொன்று தொடர்பு உடையவை என்று கூறும் கேயாஸ் தத்துவம் , ஒரு பட்டாம் பூச்சி இறக்கையின் படபடப்பிறக்கும் ஒரு பூகம்பத்திற்கும் கூட தொடர்பு உண்டு என்றும் கூறுகிறது. அப்படி என்றால் இவ்வுலக நாதனின் உதட்டசைவு ஏன் சம காலத்து நம்மவர்களின் எழுத்தாணியை அசைத்திருக்கக் கூடாது?????? உங்கள் சந்தேகம் எனக்கும் தான்..ஏன் நம்மவர் எழுத்தாணியின் அசைவு  இவ்வுலக பிதாவின் உதட்டை அசைத்திருக்க முடியாது? என்பது தானே? மேலே படியுங்கள், நமது  எத்தனை படைப்புக்கள் பிற மொழிகளில் மொழிமாற்றம் செய்யப்பட்டுள்ளன?? எத்தனை கோலிவுட் காவியங்கள் ஹாலிவுட் ச...

ஆரம்பாகமம்..

இது தான் எனது முதல் பதிவு........கண்ணையும் காதையும் நன்றாக படைத்து ரசிக்கச் செய்த கடவுள் கையையும் வாயையும் அந்த அளவுக்கு சிறப்பாக செய்ய வில்லையே என்று  என்னை படைத்தவனை நொந்துக்கொண்டு.... என்ன எழுதலாம்? எப்படி எழுதவேண்டும்?? எப்படி பட்டதை எழுதினால் எல்லோரும் விரும்புவார்கள்??? என்று வயதுக்கு வந்த பெண்ணைப் போல  தலைப் பிள்ளையைக் குறித்து ஆழ்ந்து சிந்தித்துக் கொண்டிருக்கும் போதே... இருவர் எனக்கு குழந்தை பிறந்து விட்டது போல வந்து உற்று  நோக்கி, இல்லை என்ற உடன் உட்கார்ந்தும் கொண்டார்கள்(சிந்திக்கவா முடிகிறது???). குழந்தை பிறந்தால் தான் போவார்கள் போல!!!!(ஹிஹிஹிஹி இப்படியும் சிலர்) இதற்காகவே நான் முதல் குழந்தையை பெற வேண்டி நிர்பந்திக்க பட்டேன். அதனால் நானே  என் கனவை  தொலைத்து.... ஏதாவது பெற்றால் போதும் என்ற எண்ணத்தில், முதல் பிரசவம்..... மற்றவர்கள் மன்னிக்கவும்(ஏதோ அநேகர் காத்துக் கிடப்பது போல!). நீங்க ஏசினாலும் சரி; பேசினாலும் சரி வலைத் தளத்திற்கு ஓர் எழுதுகோல் கிடைத்து விட்டது. மீண்டும்  சந்திக்கலாம்!